கடந்த ஆண்டு, பார்க்கிங் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றியை ஹரிஷ் கல்யாண் பெற்றிருந்தார். இந்த படத்திற்கு பிறகு, இவர் நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. இந்த திரைப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் தொடர்பாக, புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் 4 நாட்கள் முடிவில் ரூபாய் 6 கோடியை, வசூலித்துள்ளதாம்.
இதேபோல், தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தால், அடுத்த தலைமுறை நடிகராக, ஹரிஷ் கல்யாண் மாறுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.