7 நாட்களில் லப்பர் பந்து படம் செய்துள்ள வசூல்

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா, காளி வெங்கட், ஜென்சன், பால சரவணன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியுள்ளார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் லப்பர் பந்து திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லப்பர் பந்து திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக திரை வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.  

RELATED ARTICLES

Recent News