அஜித்தின் துணிவு திரைப்படம் தான் கடைசியாக ரிலீஸ் ஆகியிருந்தது. அதன்பிறகு ஒப்பந்தமான விடாமுயற்சி திரைப்படம், நீண்ட மாதங்களாக தயாரிப்பிலேயே உள்ளது.
ஆனால், இந்த பொங்கல் பண்டிகைக்கு, இப்படம் நிச்சயம் ரிலீஸ் ஆகிவிடும் என்று, ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர். இவ்வாறு இருக்க, லைக்கா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால், பொங்கல் பண்டிகை அன்று, விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், தங்களது கவலையை, இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.