அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட்டுகாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பாக இயக்குனர் மகிழ்த்திருமேனியும் தனது சோசியல் மீடியாக்களிலும் பதிவிட்டு வருகிறார். லைக்கா புரொடெஷன் தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தின், முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏகே 62 படத்தை விரைவில் முடிக்கவேண்டும் என்றும், ஏற்கனவே படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதால் கால தாமதாம் ஆகிவிட்டதால் அஜித் மிகப்பெரிய திட்டம் போட்டு வைத்துள்ளாராம். மேலும் விஜய்யின் லியோ படத்துடன் வெளியிட ஆசை படுகிறார் என்று திரைவட்டாரங்கள் கூறுகின்றனர். அண்மையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதியது குறிப்பிடத்தக்கது.