உடல் சோர்வு காரணமாகவும் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் ரோடு சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார், என்று மருத்துவமனை தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி ,திடீர் வயிற்று வலி மற்றும் உணவு உபாதை ஏற்பட்டதன் காரணமாக உணவுப்பை உறிஞ்சுதல் என்னும் Gastric Suction சிகிச்சை வழங்கப்பட்டு நலமாக உள்ளதாகவும், இன்று ஏழு மணியளவில் மீண்டும் வீடு திரும்புவார் என்று மருத்துவ தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.