சினிமா
வெற்றிமாறன் படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்!
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2-ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு, சூர்யாவின் வாடிவாசல் என்ற படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி, தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர், நடிகர் விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை, தயாரித்து வருகிறார்.
இப்படத்திற்கு முதலில் மா.பொ.சி என்று பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அதாவது, இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில், படத்தின் பெயர், சார் என்ற மாற்றப்பட்டுள்ளது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)