Connect with us

Raj News Tamil

“சினிமாவுல நடிக்குற ஆட்கள விட எனக்கு ரசிகர்கள் அதிகம்” – கூல் சுரேஷ்

சினிமா

“சினிமாவுல நடிக்குற ஆட்கள விட எனக்கு ரசிகர்கள் அதிகம்” – கூல் சுரேஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில், முதல் நாள், முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள், படம் தொடர்பான தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், படத்தை பார்த்த நடிகர் கூல் சுரேஷ்-ம், தனது கருத்துக்களை கூறியுள்ளார். அதில், “நான் படவாய்ப்புகளை பெறுவதற்காக Review கொடுப்பதற்கு வரவில்லை. உண்மையில் அதற்காக தான் நான் வருகிறேன் என்றால், தற்போது பல்வேறு படங்களில் நான் நடித்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லையே” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சினிமா எனக்கு முதல் தொழில். இது எனக்கு இரண்டாவது தொழில். சினிமாவில் நடிப்பவர்களை விட, எனக்கு ரசிகர்கள் அதிகமாக தான் உள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top