Connect with us

Raj News Tamil

மாமன்னன் படம் எப்படி இருக்கு?? இதோ முழு விமர்சனம்

maamannan thirai vimarsanam in tamil

சினிமா

மாமன்னன் படம் எப்படி இருக்கு?? இதோ முழு விமர்சனம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் மாமன்னன். ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காசிபுரம் என்ற ஊரின் MLA-வாக இருக்கிறார் வடிவேலு (மாமன்னன்). இவருடைய மகன் உதயநிதி தற்காப்பு கலை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். உதயநிதிக்கு சொந்தமான தற்காப்பு கலை பள்ளி வளாகத்தில் கீர்த்தி சுரேஷ் இலவச கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இது பிடிக்காத ஃபகத் ஃபாசிலின் அண்ணன் கல்வி மையத்தை அடித்து நொறுக்குகிறார்.

maamannan thirai vimarsanam in tamil

இதனால் பிரச்சினை வெடிக்கிறது. இதற்காக பஞ்சாயத்துப் பேச வரும் வடிவேலுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாததால் பொங்கி வெடிக்கிறார் உதயநிதி. அதன் பிறகு என்ன நடந்தது? ஃபகத் ஃபாசில் என்ன செய்தார்? வடிவேலு, உதயநிதி சந்தித்த எதிர்ப்புகள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை.

இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் தனது சமூக நீதியை அழுத்தமாக மாமன்னன் மூலம் பேசியுள்ளார். வடிவேலு தனது அபார நடிப்பால் மிரள வைக்கிறார். கீர்த்தி சுரேஷ்க்கு பெரிய கதாபாத்திரம் இல்லையென்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். உதயநிதியை வைத்து படத்தை உருவாக்கி இருந்தாலும் அவரை ஓவர்டேக் செய்து ஃபகத்தும் வடிவேலுவும் படத்தில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கதை சொல்கிறது.

மொத்தத்தில் இந்த ‘மாமன்னன்’ மனதை கவர்கிறார்..

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top