சினிமா
போட்ட காசு கூட எடுக்கல.. அதுக்குள்ள இவ்வளவு அலப்பறையா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், கடந்த 29-ஆம் தேதி வெளியான திரைப்படம் மாமன்னன்.
கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம், சில முற்போக்கு விமர்சகர்களால் மட்டும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படம் வெற்றி அடைந்துள்ளதாக கூறி, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
இதனை கவனித்த சினிமா ஆர்வலர்கள் சிலர், படத்தின் பட்ஜெட்டில் பாதியை கூட இன்னும் வசூலிக்கவில்லையே.. அதற்குள் கேக் வெட்டி கொண்டாடுகிறீர்களே என்று விமர்சித்து வருகின்றனர்.
35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மாமன்னன் திரைப்படம், இதுவரை வெறும் 15 கோடி ரூபாயை மட்டும் வசூலித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
You must be logged in to post a comment Login