மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் நாளை திரையங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் மாமன்னன். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாளை ‘மாமன்னன்’ படம் வெளியாகவுள்ள நிலையில் முன்பதிவில் மட்டுமே கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. எனவே இப்படம் முதல் நாளில் மட்டும் ஐந்து கோடிக்கு மேல் குறையாமல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.