சுந்தர் இயக்கத்தில் உருவான மதகஜராஜாவும், ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு திரைப்படங்களில், மதகஜராஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், கேம் சேஞ்சர் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இவ்வாறு இருக்க, இந்த இரண்டு திரைப்படங்களின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 3 நாட்களில், 15 கோடி ரூபாயை, மதகஜராஜா திரைப்படம் வசூலித்துள்ளது. இதேபோல், உலகம் முழுவதும் 5 நாட்களில், 180 கோடி ரூபாயை, கேம் சேஞ்சர் திரைப்படம் வசூலித்துள்ளது.
450 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், தற்போது வரை 180 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பது, பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், குறைவான பட்ஜெட்டில் உருவான மதகஜராஜா, அதிகமாக வசூலித்திருப்பது, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.