கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து அரசு விரைவுப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த வாரம் முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட சில பேருந்துகளை மாதவரத்தில் இருந்து இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 160 பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல், தாம்பரம் பைபாஸ், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் வழியாக இந்த பேருந்துகள் இயக்கப்படும்
தென் மாவட்டங்களுக்கு மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் 40 ரூபாய் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.