230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 163 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. காங்கிரஸ் 66 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது.
மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவராக கமல்நாத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில், மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் இன்று நீக்கப்பட்டுள்ளார்.
அம்மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக ஜிது பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். 49 வயதான ஜிது பட்வாரி கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அம்மாநில உயர்கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார்.