மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் மற்ற சமூகத்தை சேர்ந்த ஒருவரை தெரியாமல் தொட்டதற்காக தலித் நபரின் முகத்தில் மனித மலம் பூசப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ராம்கிரிபால் படேல் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.