மின் கட்டணம் செலுத்தாத மூதாட்டியை அரை நிர்வாணமாக ஓட விட்ட மின்வாரிய ஊழியர்கள்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் மூதாட்டி ஒருவர் மின்கட்டணத்தை செலுத்தாததால் அவருடைய வீட்டிற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் மூதாட்டி குளியலறையில் இருந்திருக்கிறார். ஊழியர்கள் பொருட்களை எடுத்துச் சென்றதால் அரை நிர்வாணத்தில் அந்த மூதாட்டி அவர்களை பின் தொடர்ந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மின்சாரத்துறை மந்திரி பிரதுமான் சிங் தோமர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

RELATED ARTICLES

Recent News