துரோகத்தின் அடையாளம்…..எடப்பாடி பழனிசாமி முன்பே அவதூறாக பேசிய பயணி..!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமானவர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் விமானத்தில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவருடன் பயணித்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போன் மூலமாக ஃபேஸ்புக்கில் லைவ் சென்றார்.

அப்போது, அவர் தன்னுடைய லைவ்-வில் பேசியதாவது,” இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக அளித்தவர்” என்று பேசினார்.

அந்த நபரை பிடித்து விசாரித்த போது அந்த நபரின் பெயர் ராஜேஸ்வரன் என்பதும் அவர் சசிகலாவின் ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News