முதல் மனைவி குறித்து அதிர்ச்சி தகவல் சொன்ன மதுரை முத்து!

சின்னத்திரையில் பெரும் பிரபலம் அடைந்த நகைச்சுவை கலைஞன் மதுரை முத்து. இவருக்கும், லேகா என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்ற நிலையில், லேகா கடந்த 2016-ஆம் ஆண்டு, கார் விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, மதுரை முத்து, இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், தனது முதல் மனைவி குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், எனது முதல் மனைவிக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருந்தது. அவரது கணவர் விட்டுவிட்டு சென்றதால், நான் திருமணம் செய்துக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.. இப்போது தான் முதன்முறை சொல்கிறேன் என்றும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.