மதுரை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

மதுரை அருகே சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் மூர்த்தியை சம்பவ இடத்திற்கு சென்று தேவையான உதவிகளை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News