அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படம், இந்த மாத இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், அஜித்தின் கதாபாத்திரம் குறித்தும், விடாமுயற்சி படத்தின் மையக்கரு குறித்தும் தெரிவித்துள்ளார்.
அதாவது, “இது, ஒரு மனிதன் மேற்கொள்ளும் தொடர் முயற்சியை பற்றிய படம் ” என்றும், “மையக்கருவுடன் சேர்ந்து, உறவுகள் குறித்த சில விஷயங்களும், இப்படத்தில் உள்ளது” என்றும், மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். மேலும், “இப்படத்தில், அஜித்தின் கதாபாத்திரத்திற்கு பல்வேறு அடுக்குகள் உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.