இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக இருப்பது மகா கும்பமேளா. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு புனித நீராடினால், தங்களது பாவம் நீங்கும் என்று கூறுவது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தான், இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இன்று இந்த மாபெரும் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 48 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், சாதுக்கள், துறவிகள், அகோரிகள், சாதாரண பக்தர்கள் என்று பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டுள்ளனர்.