மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் நெய் விளக்கேற்றி அவர்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து கோவில் கருவறையில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று மாலை 4 மணி அளவில் திறக்கப்பட்ட நடையானது நாளை மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் எப்போதும் போல் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News