சினிமா
மகாராஜா படத்தின் வசூல்.. முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் 50-வது படமாக உருவாகியுள்ள மகாராஜா, நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
செய்தியாளர்களுக்கான திரையிடலிலேயே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தற்போது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ரூபாய் 10 கோடியை, இப்படம் வசூலித்து இருக்கிறது.
இனி தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு விடுமுறை இருப்பதால், படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)