சினிமா
10 நாட்களில் மகாராஜாவின் வசூல் என்ன? முதன்முறையாக சாதிக்கும் விஜய்சேதுபதி!
விஜய்சேதுபதி நடிப்பில் உருவான பல்வேறு திரைப்படங்கள், பெரும்பாலும் தோல்வியை தான் தழுவி வந்தன.
இதனால், நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு, மகாராஜா படத்தில் அவர் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான அப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான நிலவரம், தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, 10 நாட்களில், ரூபாய் 81 கோடியை வசூலித்துள்ளது.
இந்த தகவல், படக்குழுவினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது. மேலும், விஜய்சேதுபதியின் திரை வாழ்க்கையிலேயே, இந்த திரைப்படம் அதிகம் வசூலித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)