விஜய்சேதுபதி நடிப்பில் 50-வது படமாக உருவான மகாராஜா, சமீபத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன், இப்படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில், நடிகர் சாந்தனு தான், இப்படத்தின் முதல் சாய்ஸ் என்றும், ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் அவரால் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியிருந்தார்.
இவரது இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள், சாந்தனுவின் தந்தை கே.பாக்யராஜின் தலையீட்டால் தான், இந்த பட வாய்ப்பு பறிபோகியிருக்கும் என்று தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.
ரசிகர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ள சாந்தனு, “இந்தக் கதை நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் என் தந்தை கிடையாது. நித்திலன் என்னிடம் பேசியதே, என் தந்தைக்கு தெரியாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்காததால் தான், அப்போது மகாராஜா படத்தை எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.