குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன். இந்த படத்திற்கு பிறகு, 7 ஆண்டுகள் இடைவெளிவிட்ட இவர், தற்போது விஜய்சேதுபதியை வைத்து மகாராஜா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.
அதாவது, மகாராஜாவின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை இன்னும் விற்பனை ஆகவில்லை. இதனால், படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாமல், படக்குழு தடுமாறி வருகிறது.