விஜய் சேதுபதியின் 50 வது படமான ‘மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தபடத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் லகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஜா படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி மகாராஜா திரைப்படம் வரும் 19-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.