மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளைஞரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர், இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, காதல் ஜோடிகள் இருவரும் சுதந்திரமாக சுற்றி வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று தனிமையில் இருந்த இருவரும், உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அந்த சமயத்தில், அந்த இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், இளைஞரின் உடலை சோதனை செய்தனர்.
அதில், அவர் மது அருந்தியிருப்பதும், அந்த இளைஞரின் சட்டை பாக்கெட்டில் வாயக்ரா மாத்திரை இருப்பதும், கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்மூலம், மது போதையில் இருக்கும்போது, வாய்க்ரா மாத்திரை பயன்படுத்தியது தான் மாரடைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இளைஞர் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரது காதலியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.