மகாராஷ்டிரா மாநிலம் முலுண்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு, கிருஷ்ணாவின் மனைவி, அவரை விட்டு பிரிந்து, தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணா, தனது டெம்போ வாகனத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதற்கு, மாமியார் பாபி தாஜி தான் காரணம் என்று நினைத்துள்ளார். இதனால், மாமியாரை தனது டெம்போ வாகனத்தில் அடைத்து வைத்து, தீ ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பாபி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வாகனத்தின் உள்ளேயே கிருஷ்ணாவும் இருந்ததால், அவர் மீது தீ பரவி, அவரும் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.