வாயை பொளந்துக் கொண்டு தூங்கும் நடிகை மஹிமா நம்பியார்!

தமிழ்படம் பாகம் 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன், அடுத்ததாக ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க உள்ள இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன், தனது ட்விட்டர் பக்கத்தில், மஹிமா நம்பியார் வாயை பிளந்துக் கொண்டு தூங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், ரத்தம் படக்குழுவினரின் கடின உழைப்பு என்றும் அந்த பதிவிற்கு கேப்ஷன் வழங்கியுள்ளார்.

பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், கிண்டலாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, “ அவங்க hardwork பன்றத பாக்கும் போது. அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு” என நடிகர் விஜய் ஆண்டனியும் அந்த பதிவிற்கு ரிப்ளை செய்துள்ளார்.