வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்த தென்மேற்கு வங்கக்கடலிளிருந்து தென்கிழக்கே மிச்சாங் புயலாக வலுப்பெற்றுள்ளது.இப்புயலானது , வடமேற்கு திசையில் வலுப்பெற்று
நாளை காளைக்குள் தெற்கு ஆந்திரப்பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய
வடதமிழகக் கடலோரப்பகுதிகளில் மேற்கு மத்திய வங்ககடலை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
இதனால் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், இது விரைவில் வலுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தமழையால் ரயில் மற்றும் விமான வேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தமிழகத்தின் சென்னை உட்பட ஆந்திரா , ஒடிசா மாநிலங்களின் வழியாக செல்லும் 118 விரைவு ரயில்கள் , டிசம்பா் 3 முதல் 7 வரை ரயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதில் குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை , ஹைதரபாத் செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து சென்னை செல்லவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், சென்னையிலிருந்து புறப்பட உள்ள 9 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுவுள்ளன.