Connect with us

Raj News Tamil

வீட்டு பணிப்பெண் வழக்கு – தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழகம்

வீட்டு பணிப்பெண் வழக்கு – தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் மனு தள்ளுபடி!

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜான் சத்யன், ‘பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக மனுதாரரர்கள் ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ. மகன் என்பதால் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்’ என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பா. மோகன், ‘குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் உள்ளனர். சாட்சிகள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றார். பின்னர் போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர் எம்.சுதாகர், ‘விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது’ என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீது நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு கூறினார். அதாவது, ‘மனுதாரர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, விசாரணையை முடிக்க புலனாய்வு அதிகாரிக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

மனுதாரர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

More in தமிழகம்

To Top