Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

கணவருடன் நடைபயணம்.. புதைமணலில் சிக்கிய பெண்.. இறுதியில் நடந்தது என்ன?

உலகம்

கணவருடன் நடைபயணம்.. புதைமணலில் சிக்கிய பெண்.. இறுதியில் நடந்தது என்ன?

அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் பேட்ரிக். இவர் தனது மனைவி ஜேமி அக்கார்டு என்பவருடன், வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த தம்பதி, மைன் மாகாணத்தில் பிப்ஸ்பர்க் பகுதியில் உள்ள பாப்ஹம் கடற்கரை ஸ்டேட் பார்க் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, கடற்கரையை ஒட்டிய பகுதியில், தம்பதிகள் இருவரும் ஒன்றாக நடந்து, இயற்கையை ரசித்துள்ளனர். அந்த சமயத்தில், அங்கு இருந்த புதைமணலில், ஜேமி அக்கார்டு சிக்கியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், தீவிர முயற்சிக்கு பிறகு, தனது மனைவியை காப்பாற்றிவிட்டார்.

இதுகுறித்து பேசிய ஜேமி, “என் கணவர் என்னை வெளியே எடுத்த உடன், என்ன நடந்தது என்று, அப்பகுதியை சுற்றிலும் நாங்கள் இருவரும் பார்த்தோம். அதற்கு காரணம் என்னவென்றால், உண்மையான துளையில் தான் நான் விழுந்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டோம்.

ஆனால், அதுமாதிரி அந்த இடத்தில் எதுவும் இல்லை. அது பார்ப்பதற்கு சாதாரண கடற்கரை போல் தான் இருந்தது. பின்னர், அந்த இடம் மீண்டும், தனக்குள் மணலை நிரப்பிக் கொண்டது” என்று புதைமணல் குறித்து, விவரித்தனர்.

புதைமணல் என்பது என்ன?

காலநிலை மாற்றத்தின் காரணமாக, இயற்கை சூழல் கொண்ட பகுதிகளில் உள்ள மணல்கள் மிகவும் மென்மையாகி, புதைமணல் உருவாகிறது.

ஆனால், இந்த புதைமணல் மிகவும் அடர்த்திக் கொண்டது என்பதால், ஒரு நன்கு வளர்ச்சி அடைந்த மனிதனை முழுமையாக விழுங்க முடியாது என்று, ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

சினிமா, வழிவழியாக சொல்லப்படும் கதைகளில், புதைமணல் மனிதனையே இழுத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதைமணலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

“மிகவும் பொறுமையாக, ஊர்ந்து செல்ல நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். மேலும், முன்பக்கமாக சாய்ந்து அல்லது மிதக்கும் நிலையில் இருக்க வேண்டும். உங்களது எடையை, அந்த பகுதி முழுவதும் எவ்வளவு நீங்கள் பரவவிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு எளிமையாக உங்களால் நகர முடியும்” என்று, ஸ்டேட் பார்க் மேனேஜரும், பாதுகாப்பு அதிகாரியுமான சீன் வைலன்கோர்ட் கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top