பராமரிப்பு பணிகள்: சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கறை -தாம்பரம் இடையே மின்சார ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் இன்று (நவ.17) காலை 7 முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதே சமயம் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை பல்லாவரம் இடையே இரு மார்க்கத்திலும் காலை 6.15 மணி முதல் மாலை 5.05 மணிவரை வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் மொத்தம் 35 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இப்பணிகள் முடிவடைந்த பின்னர் மாலை 5 மணி முதல் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News