50 வயதில் திருமணத்திற்கு முன்பே பிரபல நடிகை கர்ப்பமா?

மணிரத்னம் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில், கடந்த 1998-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உயிரே. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும், தக்க தைய தைய தையா என்ற பாடலில் நடனம் ஆடியவர் மலைக்கா அரோரா.

இவருக்கு ஏற்கனவே விவாகரத்தான நிலையில், தற்போது போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர் உடன், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக, வடமாநில ஊடகங்களில், தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த இவர், இந்த தகவல் அனைத்தும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் எப்படி வெளியானது என்று புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.