சார்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு, பா.ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் தங்கலான்.
இப்படத்தின் ஷீட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்து, பின்னணி வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. வரும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், படமாக்க பணிகளில், எனக்கு மிகவும் அச்சம் ஏற்படுத்தக் கூடிய பகுதி என்பது டப்பிங் தான். நான் டப்பிங் பேசும்போது, யாராவது வந்து, என் கைய இருக்கமாக பிடிச்சுக்கோங்க.” என்று கூறியுள்ளார்.
மேலும், தங்கலான் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமின்றி, அந்த பதிவில், தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
