தங்கலான் படத்திற்காக ஒல்லியாக மாறிய விஜய் பட நடிகை!

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு KGF-ல் நடந்து முடிந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு, படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், தங்கலான் படத்தின் நாயகி மாளவிகா மோகனன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இன்னும் இரண்டு நாட்களில், தங்கலான் படத்தின் ஷீட்டிங் தொடங்க உள்ளது என்றும், அதற்காக தான் பிட்னஸாக மாறியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வயிற்றுப் பகுதியை தட்டையாக மாற்றியுள்ள அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News