பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்திற்கு பிறகு, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில், அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை நண்பர்கள் உடன், மாளவிகா மோகனன் கொண்டாடியிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதில், இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்து, அவர் முத்தம் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த இளைஞர் தான் மாளவிகாவின் காதலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.