விஜயின் படத்தில் சூப்பர் ஸ்டார்!

விஜய் மற்றும் அட்லியின் கூட்டணியில், தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 ப்ளாக் பஸ்டர் படங்கள் வெளிவந்துள்ளன. இவர்களது கூட்டணி மீண்டும் இணையுமா என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் படத்திற்கு பிறகு, மீண்டும் அட்லியின் இயக்கத்தில், விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தில், விஜயுடன் இணைந்து, பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.