நுரையீரல் நோயால் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்..! திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் மலையாள நடிகர் கொச்சு பிரேமன் காலமானார். அவருக்கு வயது 68. 1996ம் ஆண்டு வெளியான டில்லிவாலா ராஜகுமாரன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

சமீப காலமாக தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வந்தார். இதுவரை சுமார் 250 படங்களில் நடித்துள்ளார்.

cinema news in tamil


நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேமனின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.