அழகர்கோவில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்..!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலக புகழ்பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பழமுதிர்சோலை பகுதியில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பன்திருப்பதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்குசென்று ஆண் சடலத்தை மீட்டனர். பிறகு நடைபெற்ற விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நாயக்கர்பட்டியை சேர்ந்த அடைக்கலம் என்பதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவரின் மர்ம மரணம் குறித்து கொலையா? தற்கொலையா? என்பது குறித்து அப்பன்திருப்பதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News