காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இவர் தான்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக பெரும் வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.

இதையடுத்து, ராகுல் காந்தியின் தாய் சோனியா காந்தி, இடைக்கால தலைவராக செயல்பட்டு வந்தார். கட்சியின் வளர்ச்சிக்கு நிரந்தர தலைவர் தேவைப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் முடிவு இன்று வெளியான நிலையில், இதில் அதிக வாக்குகள் பெற்று, மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு, நேருவின் குடும்பத்தை சேராதவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.