இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. சார்பில் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட 14 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.
தொகுதிப் பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தலைவர் பொறுப்பை ஏற்க நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கார்கே பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்ததாக தெரிகிறது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.