மாமன்னன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக, மாரி செல்வராஜ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். விரைவில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.