ரவுடி மாதிரி பேசக்கூடாது….அமித்ஷாவுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய போது “வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் பாஜக 35 தொகுதிகளில் வெற்றிபெறும். அவ்வாறு 35 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றால் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி 2025-ம் ஆண்டுக்கு மேல் நிலைக்காது” என பேசியுள்ளார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்போம் என்று நாட்டின் உள்துறை மந்திரி எப்படி பேச முடியும். நாட்டின் அரசியலமைப்பு மாறிவிட்டதா? அமித்ஷாவின் பேச்சு மேற்குவங்காளத்தில் மாநில அரசை கவிழ்க்க முயற்சிகள் நடைபெறுவதை காட்டுகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா ரவுடி போல் பேசக்கூடாது’ என்றார்.

RELATED ARTICLES

Recent News