மனைவியை காதலன் உடன் திருமணம் செய்து வைத்த கணவர்!

உத்தரபிரதேசம் மாநிலம் சாந்த்கபூர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. இவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறியாத பெற்றோர், பப்லு என்பவருக்கு ராதிகாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணமாகி, 2 குழந்தைகள் பிறந்த பிறகும், தனது காதலன் உடனான உறவை, ராதிகா தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பப்லு, தனது மனைவியிடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு அவர் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தனது மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைக்கும் முடிவை, பப்லு எடுத்துள்ளார். அதன்படி, நேற்று ராதிகாவுக்கும், அவரது காதலருக்கும் கணவர் பப்லு முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.

இதையடுத்து, தனது 2 குழந்தைகளை, தானே வளர்க்கிறேன் என்று, மனைவியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். மனைவிக்கு கணவரே முன்நின்று, அவரது காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News