பழங்கால மனிதனுக்கு தொடர்புடைய பல்வேறு இணைப்புகள், அகழ்வாராய்ச்சிகளின் மூலமாக, அதுதொடர்பான ஆராய்ச்சிகளின் மூலமாக மனிதர்களுக்கு கிடைத்து வருகிறது.
ஒருசில இடங்களில், இதனை ஒரசு முன்னெடுத்து நடத்துகிறது. ஒருசில இடங்களில், சில தனிநபர்கள் பொழுது போக்காக நடத்துகின்றனர். ஒருசில தனி நபர்கள், புதையல் வேட்டைக்காக நடத்தி வருகின்றனர்.
இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர் ஒருவர், தன்னுடைய பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பூமியில் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்துக் கொண்டுள்ளார். அப்போது, அவருக்கு மண் பானை ஒன்று கிடைத்துள்ளது.
அந்த பாணையில், திரிசூலம் வடிவிலான தங்கமும், சில தங்க கட்டிகளும், பச்சைக் கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரமும் கிடைத்துள்ளது. அந்த தங்கப் புதையலை அவர் எடுக்க முற்படும்போது, அதனுள்ளே பாம்பு ஒன்றும் சீறிக் கொண்டு வெளியே வந்தது.
இதனை பார்த்து, மிகுந்த அதிர்ச்சி அடைந்த அவர், பாம்பை வெளியேற்றிவிட்டு, அதில் இருந்த தங்கங்களை எடுத்து சென்றுவிட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே, மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இது, இதுவரை, 1.7 மில்லியன் பார்வைகளையும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்று வருகிறது. இந்த வீடியோவின் கமெண்ட்ஸ் பக்கத்தில், பலர் தங்களது ஆச்சரியங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஒருசில நெட்டிசன்கள், பூமியில் புதைந்து கிடந்த தங்கமா, இவ்வளவு ஜொலிப்புடன் உள்ளது என்றும், அந்த மண் பானை பார்ப்பதற்கு கடையில் வாங்கிய புது பானை போல் உள்ளது என்றும், கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு பல்வேறு தரப்பட்ட கமெண்ட்ஸ்களுக்கு மத்தியில், இந்த வீடியோ வைரலாகி தான் வருகின்றது.