வியாட்நாம் நாட்டில் உள்ள குவாங் பின் மாகாணத்தின் போ டிராச் பகுதியை சேர்ந்தவர் ஜான் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, மது அருந்தியுள்ளார்.
அப்போது, இவருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சண்டையாக மாறியுள்ளது. ஜான் சுயநினைவின்றி கிடந்த சமயத்தில், அந்த இன்னொரு நபர், உணவு சாப்பிடுவதற்கு பயன்படும் மரக் குச்சியை மூக்கில் குத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் நடந்தபோதும், ஜான் சகஜமாகவே இருந்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும், அவருடைய கண் பார்வையும் குறையத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, அந்த நபர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜானை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது மூக்கில், ஜாப்ஸ்டிக் குச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்து, அந்த குச்சி, மூளையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜான் பூரண நலத்துடன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
யாராவது அடித்தாலோ, விபத்தில் சிக்கினாலோ காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.மேலும், வலி ஏற்படவில்லை என்பதால், தமக்கு ஏதும் பிரச்சனை இல்லை என்று அர்த்தம் கிடையாது. அதன் பின்விளைவுகள், வேறு மாதிரியாக இருக்கும் என்பதற்கு, இந்த சம்பவமே உதாரணம்..