தாத்தா விட்டுச் சென்ற புதையல்.. 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்த பேரன்..!

போலந்து நாட்டில் வசித்து வந்தவர் ஆடம் கிஸாஸ்கி. இவருக்கு 4 மகன்கள் இருந்தனர். அந்த சமயத்தில், 2-ஆம் உலகப் போர் முழு வீச்சில் நடைபெற்று வந்ததால், தன்னுடைய வெள்ளிப் பொருட்கள் அனைத்தையும், வீட்டின் பாதாள அறையில் புதைத்து விட்டு, தன்னுடைய மகன்களை போலந்து நாட்டில் இருந்து, வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

மேலும், அந்த வெள்ளிப் பொருட்களை எடுப்பதற்கான வரைப்படத்தையும் தயார் செய்து வைத்திருந்தார். இந்த சம்பவம், கடந்த 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த சம்பவம் நடந்து 84 ஆண்டுகள் முடிந்த நிலையில், தற்போது இந்த புதையலை, ஆடம் கிஸாஸ்கியின் பேரன் கண்டுபிடித்துள்ளார்.

இதுதொடர்பான தேடலை கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கிய அவர், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, புதையலை கண்டறிந்துவிட்டார்.

அந்த பாதாள அறையின் உள்ளே, பல கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் இருந்தது மட்டுமின்றி, சிறிய பால் குடுவை, தங்க சிலுவை பதிக்கப்பட்ட செயின், வேட்டையாடும் துப்பாக்கிகள் உட்பட வேறு சில பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் வெள்ளிப் பொருட்களாக இருப்பது மட்டுமின்றி, பல ஆண்டு பழமையான பொருட்களாகவும் இருப்பதால், இதன் மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News