கர்ப்பம் தரிக்காத மனைவி.. பெண்ணுறுப்பை ப்ளேடால் வெட்டிய கணவன்!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரா. இவருக்கும், இவரது மனைவிக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.

இதன்காரணமாக, இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். தொடர்ந்து இவ்வாறு சண்டை ஏற்பட்டதால், ரவீந்திராவின் மனைவி அவரது தாயின் வீட்டில், கடந்த 8 மாதங்களாக இருந்து வருகிறார். சமீபத்தில் தனது மாமியாரின் வீட்டிற்கு சென்ற ரவீந்திரா, மனைவியிடம் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தி, வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு, இயற்கைக்கு மாறான முறையில், மனைவியிடம் உடலுறவு மேற்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், தனது கையில் இருந்த ப்ளேடை வைத்து, வெட்டியுள்ளார்.

இதனால் அலறிய அந்த பெண்ணை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள ரவீந்திராவை தேடி வருகின்றனர்.