Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தங்கைக்கு தங்க மோதிரம் பரிசு.. இளைஞரை கொலை செய்த மனைவியின் உறவினர்கள்!

இந்தியா

தங்கைக்கு தங்க மோதிரம் பரிசு.. இளைஞரை கொலை செய்த மனைவியின் உறவினர்கள்!

LED டிவியையும், தங்க மோதிரத்தையும் தனது தங்கைக்கு திருமண பரிசாக கொடுக்க நினைத்த இளைஞர், அவரது மனைவியின் உறவினரால், கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா. இவர் தனது மனைவி ஷமா மிஸ்ராவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சந்திர பிரகாஷ், நாளை நடக்கவுள்ள அவரது சகோதரியின் திருமணத்திற்கு, LED டிவியையும், தங்க மோதிரத்தையும் பரிசாக கொடுக்க ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால், இதற்கு ஷமா மிஸ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஷமாவும், அவரது உறவினர்களும், சந்திர பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஷமா மிஸ்ரா, அவரது சகோதரர் உட்பட, 5 பேரை கைது செய்துள்ளனர்.

More in இந்தியா

To Top